மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட முயற்சி - கல்லூரி மாணவர்களை கைது செய்த ரயில்வே போலீசார்
சென்னை சென்ட்ரலில் மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட முயற்சி செய்த கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
* சென்னை சென்ட்ரலில் மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட முயற்சி செய்த கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
* திருத்தணி நோக்கி செல்லக் கூடிய ரயில் முன்பு, ஆயுத பூஜை கொண்டாட்டம் என்று மாணவர்கள் சிலர் கட்டியிருந்த பேனரை அவிழ்க்குமாறு கூறி ரயில்வே போலீசார் எச்சரித்தனர்.
* ஆனால் மாணவர்கள் கேட்காததால், சென்ட்ரல் ரயில்வே போலீசார் 15 மாணவர்களை கைது செய்தனர். விசாரணையில் அனைவரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை எச்சரித்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.