சென்டர் மீடியன் கட்டுவதற்கு எதிர்ப்பு : மக்கள் செல்லும் சாலையை அடைத்து கட்டியதால் எதிர்ப்பு

சாலையை அடைத்து சென்டர் மீடியன் கட்டுவதாக கூறி, பொதுமக்களே அதை இடித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-07 08:19 GMT
சென்னையை அடுத்த பூந்தமல்லி டிரங்க் சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, நெடுஞ்சாலை துறை சார்பில்  சென்டர் மீடியன் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஜட்ஜ் செல்லப்பா தெரு, பாரிவாக்கம் ஆகியவற்றை இணைக்கும் சாலையை அடைப்பது போல், சென்டர் மீடியன் இருந்ததால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ், சாமி ஊர்வலம் உள்ளிட்டவை செல்ல இடையூறாக இருக்கும் என கூறி, 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சென்டர் மீடியனை இடித்ததோடு, கட்டுமான பொருட்களையும் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்