பூத்துக்குலுங்கும் மர டேலியா மலர்கள்
கொடைக்கானலில் இளம் ஊதா நிறத்தில் பூத்துக்குலுங்கும் மர டேலியா மலர்கள், சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கொடைக்கானலில் இளம் ஊதா நிறத்தில் பூத்துக்குலுங்கும் மர டேலியா மலர்கள், சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் 2-ம் கட்ட சீசன் தொடங்க உள்ளது. இந் நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் பிரையண்ட் பூங்காவில் உள்ள நூற்றுக்கணக்கான பெல் டாக்லியா மரங்களில், மர டேலியா பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே நேற்று மாலை சுமார் ஒரு மணிநேரம் மிதமான மழை பெய்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மழையில் நனைந்தபடி வலம் வந்தனர்.