பசுமை வழிச்சாலை: "அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக் கூடாது" - உயர்நீதிமன்றம்

பசுமை வழிசாலை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2018-09-26 14:30 GMT
சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு தடை  கோரி பாமக எம்பி அன்புமணி மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திட்டத்துக்கு எதிராக  சேலத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. உடனே, அவர்களை விடுவித்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என கூறிய நீதிபதிகள், அமைதியாக போராடுபவர்களை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை,  வருகிற அக்டோபர் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்