"பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்" - தமிழக அரசின் அரசாணை வெளியீடு

திருச்செந்தூரில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு, நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2018-08-28 02:05 GMT
டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என 2017ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

இதை தொடர்ந்து, திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 60 சென்ட் நிலத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்று வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில், 78 புள்ளி 41 சதுர மீட்டரில் மணிமண்டபம், 263 புள்ளி 81 சதுர மீட்டரில் நூலகம், கழிப்பறை என மொத்தம் 342 புள்ளி 22 சதுர மீட்டரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க, ஒரு கோடியே முப்பத்து நான்கு லட்சம் ரூபாய்க்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* மொத்த பரப்பு - 342.22 சதுர மீட்டர்
* மணிமண்டபம் - 78.41 சதுர மீட்டர்
* நூலகம், கழிப்பறை - 263.81 சதுர மீட்டர்

மணிமண்டபம் அமைக்க ரூ. 1.34 கோடி நிர்வாக அனுமதி,  நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்