தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
பெரம்பலூரில் உள்ள ராஜாசாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.நாகை மாவட்டம் கல்லார் கிராமத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த கற்பக மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. திருவண்ணாமலை திருமஞ்சன கோபுரம் வீதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் சூனாம்பேடு கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது