கேரளாவிற்கு வெள்ள நிவாரணம் : ஒரு வார வருமானத்தை அனுப்பிய திருநங்கைகள்

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் 60 பேர் தங்கள் ஒரு வார வருமானத்தை வழங்கினர்.

Update: 2018-08-20 11:05 GMT
கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் 60 பேர் ஒன்றிணைந்து தங்கள் ஒரு வார கால வருமானம்  50 ஆயிரம் ரூபாயை மாவட்ட வெள்ள நிவாரணம் சேகரிக்கும் மையத்தில் வழங்கினர். தென்மேற்கு பருவ மழையால் கடும் சேதத்தை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல மாநிலங்களும் உதவி வருகின்றன.திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.  
Tags:    

மேலும் செய்திகள்