புதுக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்கும் அம்மன்
புதுக்கோட்டையில் எளிமையான தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் குங்கும காளி அம்மனின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்டு வந்த தொண்டைமான் மன்னர்கள் பல்வேறு கோயில்களை கட்டினர். அப்படி அரண்மைக்குள் உருவான ஒரு கோவில் தான் குங்கும காளி அம்மன் கோயில். வெறும் கருங்கல்லில் ஒரு சூலத்தை வடிவமைத்து அதையே அம்பாளாக பாவித்து மன்னர்கள் வழிபட்டு வந்தனர்.
ஆனால் தினமும் மன்னரின் கனவில் வந்த அம்மன் தன்னை சாதாரண பக்தர்களும் வணங்க அனுமதிக்க வேண்டும் என கூறி மறைந்துள்ளார். இதையடுத்து அம்மனை அரண்மனைக்கு வெளியே வைத்து வழிபட தொடங்கினர். அன்றிலிருந்து புதுக்கோட்டை மக்களின் காவல் தெய்வமாக மாறிப்போனாள் இந்த குங்கும காளி அம்மன்.