வருமான வரித்துறை சோதனை - 4வது நாளாக நீடிப்பு
ஆழ்குழாய் கிணற்றில் 100 பென் டிரைவ் கண்டுபிடிப்பு
சத்துணவு முட்டை மற்றும் சத்துமாவு விநியோகித்த தனியார் நிறுவனங்களின் தமிழகம் மற்றும் கர்நாடகா அலுவலகங்களில் நடந்த சோதனையில் இதுவரை கணக்கில் வராத 17 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி திருச்செங்கோட்டிற்கு அழைத்து வந்து , ரகசிய இடத்தில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்குழாய் கிணற்றில்100 பென் டிரைவ் கண்டுபிடிப்பு
இதனிடையே, தற்கொலைக்கு முயன்ற அந்த நிறுவனத்தில் காசாளர் கார்த்திகேயன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந் நிலையில் கார்த்திகேயன் வீட்டில் நடைபெற்ற சோதனையில், ஆழ்துளை கிணற்றின் குழாயில் பதுக்கி வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட பென் டிரைவ்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.