ஊராட்சி மன்ற தலைவர் கையில் 2 துப்பாக்கி... பேரதிர்ச்சியில் போலீசார்

Update: 2023-11-09 10:49 GMT

உரிமம் இல்லாத இரண்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த ஊராட்சி மன்ற தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வாகன சோதனையின்போது, இரண்டு துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்கள் வைத்திருந்த கும்பகோணம் கீழப்பரட்டை தோப்பை சேர்ந்த ஈஸ்வரன், மணிகண்டன், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்