வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியானதை அடுத்து, கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.கடந்த 1992 ஆம் ஆண்டு வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனை என்ற பெயரில், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட 215 பேருக்கு, ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டணையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்பை அடுத்து, வாச்சாத்தி கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.