+2, 10th ரிசல்ட்டில் ஏமாற்றம்.. 11th ரிசல்ட்டில் அடித்து தூக்கி கொங்கு மாவட்டம் முதலிடம்

Update: 2024-05-14 09:34 GMT

தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் பத்து மாவட்டங்களின் விவரங்களை தற்போது பார்ப்போம்..மாநில அளவில் 96.02 விழுக்காடு தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 95.56 விழுக்காடு தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் 2ம் இடத்தையும் , 95.23 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. 4ஆம் இடத்தில் உள்ள விருநகரில் 95 புள்ளி 6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94 புள்ளி 96 விழுக்காடுடன் அரியலூர் 5ஆம் இடத்தையும், 94 புள்ளி 82 விழுக்காடுடன் பெரம்பலூர் 6ஆம் இடத்தையும், 94 புள்ளி 57 விழுக்காடு தேர்ச்சி பெற்று சிவகங்கை ஏழாம் இடத்தையும் பிடித்துள்ளது. திருச்சி 94 விழுக்காடு பெற்று 8வது இடத்திலும், கன்னியாகுமரி 93.96 விழுக்காடு பெற்று 9வது இடத்திலும், தூத்துக்குடி 93.86 விழுக்காடு பெற்று 10வது இடத்திலும் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்