நகராட்சி தலைவருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய 10 கவுன்சிலர்கள் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Update: 2023-11-28 01:50 GMT

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் மற்றம் அதிகாரிகள் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக கூறி நகராட்சி அலுவலகம் முன்பு 10 கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மயங்கி விழுந்த மும்தாஜ் என்ற பெண் கவுன்சிலரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பத்மநாபபுரம் அரண்மனை சலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களை

போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்