உலகக்கோப்பை இறுதிப்போட்டி எதிரொலி.. தாறுமாறாக உயர்வும் விடுதிக் கட்டணம் | IND vs AUS

Update: 2023-11-17 17:39 GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத் நகரில், விடுதி அறைகளின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. சாதாரண விடுதிகளில் ஒரு நாள் தங்கும் கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது. நட்சத்திர விடுதிகளில் ஒரு நாள் கட்டணம் 1 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் இறுதிப்போட்டி நடைபெறும் நாளுக்கு முன்பும் பின்பும் விமானக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் அகமதாபாத்துக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விமானக் கட்டணம் உள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்