மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் கிரீஸைச் சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் தோல்வியைத் தழுவினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிமினாரும், கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸும் மோதினர். இந்தப் போட்டியில் முதல் செட்டை 6க்கு 1 என்ற கணக்கில் சிட்ஸிபாஸ் வென்றார். எனினும் அடுத்தடுத்த செட்களை 6க்கு 3 என்ற கணக்கில் டிமினார் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். தோல்வி அடைந்த சிட்ஸிபாஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.