முல்தானில் நடைபெற்ற பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணி 500 ரன்களையும், இங்கிலாந்து அணி 800 ரன்களையும் போட்டி போட்டுக் கொண்டு குவித்ததால், முல்தான் மைதானம் மீது கிரிக்கெட் விமர்சகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'தார்ச்சாலை' என முல்தான் மைதானம் விமர்சிக்கப்படும் நிலையில், எவ்வளவு முதுகை வளைத்து பந்து வீசினாலும் தங்களுக்கு உதவாத இதுபோன்ற பிட்ச் குறித்து, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இனி கேள்வி எழுப்புவார்கள் என, முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா விமர்சனம் செய்துள்ளார். அதேபோல முல்தான் மைதானத்தில் தொடர்ந்து 3 பந்துகளை தவறவிட்டால் பேட்டர்களுக்கு அவுட் கொடுக்க வேண்டும் என்றும், முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசிர் ஹூசைன் நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.