வேட்டையாடும் இந்தியா..வெளியே சென்ற அசைக்க முடியாத அணிகள்.. இங்க தான் ஆபத்தே..! காரணம் தெரியுமா?

Update: 2023-11-07 04:03 GMT

 உ லகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 12 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2ம் இடத்தில் உள்ளது. 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 3ம் இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4ம் இடத்திலும், பாகிஸ்தான் 5ம் இடத்திலும் உள்ளன.

அதே 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் 6ம் இடத்தில் இருக்கிறது. தொடரில் இருந்து வெளியேறிய அணிகளான வங்கதேசம் 4 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், இலங்கை 8வது இடத்திலும் உள்ளன. 4 புள்ளிகளுடன் அரையிறுதி ரேஸில் நீடிக்கும் நெதர்லாந்து 9ம் இடத்தில் உள்ள நிலையில், தொடரில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து, 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

--

Tags:    

மேலும் செய்திகள்