8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2022-04-11 20:06 GMT
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத், பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா அரை சதம் அடித்தார். ஹைதரபாத் தரப்பில் புவனேஷ்குமார், நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி, 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில், கேப்டன் வில்லியம்சன் அரை சதம் அடித்து வெற்றிக்கு உதவினார்.

Tags:    

மேலும் செய்திகள்