டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பளுதூக்குதல் : ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் திருநங்கை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் திருநங்கை தோல்வி அடைந்து வெளியேறினார்.

Update: 2021-08-03 10:52 GMT
 நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட் என்ற திருநங்கை, மகளிர் 87 கிலோவுக்கு மேற்பட்ட பளுதூக்குதல் போட்டியில் கலந்து கொண்டார். அதில் ஸ்நாட்ச் பிரிவில் 125 கிலோ எடையை தூக்க முயன்ற அவர், வெற்றிகரமாக எடையை தூக்க இயலாமல் தோல்வியைத் தழுவினார். இதன்மூலம், அவர் போட்டியில் இருந்து வெளியேறினாலும், ஒலிம்பிக் வரலாற்றிலேயே, அதிகாரப்பூர்வமாக ஒரு போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை அவர் படைத்து உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்