இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்... இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் 3 வது நாளிலே முடித்த இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது

Update: 2021-03-06 13:19 GMT
இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் 3 வது நாளிலே முடித்த இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் புதிதாக உருவாகியுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்த‌து.முதல் இன்னிங்சில் , இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்த‌து. இந்திய அணியின் அக்சர் படேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கில், விராட் டக் அவுட் ஆக, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த‌து. இதையடுத்து, ரிஷப் பண்ட் பொறுப்பாக விளையாடி சதம் விளாச, அவருடன் ஜோடி சேர்ந்த தமிழக வீர‌ர் சுந்தரும் 96 ரன்கள் விளாசினார். மற்ற வீர‌ர்கள் விக்கெட்டை பறிகொடுத்த‌தால் அவரது சதம் பறிபோனது.இதை அடுத்து 2 வது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அஸ்வின் மற்றும் அக்சர் படேலின் சுழலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 135 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி, Card - 4 25 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த‌து. 
அக்சர் படேல் மற்றும் தமிழக வீர‌ர் அஸ்வின் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதேபோல டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அறிமுக போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்