ஐ.பி.எல் போட்டிக்கு தடை கோரி வழக்கு: "கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை என்ன?" - கிரிக்கெட் வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது கொரோனா பரவாமல் தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-03-12 10:35 GMT
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு வாய்ப்புள்ளதால், ஐ.பி.எல் போட்டிக்கு தடை விதிக்க கோரி, அலெக்ஸ் பென்சிகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐபிஎல் போட்டிகளின் போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய பிசிசிஐ-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்