ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை விதிக்ககோரி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
கொரோனா அச்சுறுத்தலால் ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வரும் 29ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி அலெக்ஸ் பென்சிகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் போட்டிகளை காண மைதானத்திற்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருவார்கள் என்பதால், கொரோனா எளிதாக பரவ வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே , பெரும் ஆபத்தை தவிர்க்க சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.