ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Update: 2019-01-07 05:13 GMT
* இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 622 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா, 300 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 'பாலோ-ஆன்' ஆனது. 

* 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 6 ரன் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 5ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. 

* இதையடுத்து, இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2க்கு ஒன்று என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி, டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல்முறை. ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் இந்திய வீரர் புஜாராவுக்கு வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்