பிசிசிஐ-யிடம் ரூ 447 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 447 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை சர்வதேச கிரிக்கெட் வாரியம் தள்ளுபடி செய்தது.

Update: 2018-11-20 14:36 GMT
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 447 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை சர்வதேச கிரிக்கெட் வாரியம் தள்ளுபடி செய்தது. கடந்த 2015ம் ஆண்டு முதல் 2033 வரை இரு நாடுகளுக்கு இடையே, 6 கிரிக்கெட் தொடர்களை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் இருக்கும் வரை, கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாது என மத்திய அரசு அறிவித்து விட்டது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கை சர்வதேச கிரிக்கெட் வாரியம் தள்ளுபடி செய்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்