3வது டெஸ்ட் : இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம்...
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாகி உள்ளது.
நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 4வது நாள் ஆட்டத்தை நேற்று
இங்கிலாந்து தொடர்ந்தது. குக் 17 ரன்களிலும், ஜென்னிங்ஸ் மற்றும் கேப்டன் ரூட் தலா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களம் இறங்கிய ஸ்டோக்ஸ் 62 ரன்களையும் பட்லர் 106 ரன்களையும் எடுத்து இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். எனினும் இங்கிலாந்து விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. 4வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கட் இழப்புக்கு 311 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இன்னும் 1 விக்கெட் மட்டுமே உள்ள நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற 210 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவின் வெற்றி உறுதியாகி உள்ளது.