வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் தொடர் - தொடரை முழுமையாக வென்றது ஆப்கானிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

Update: 2018-06-08 09:47 GMT
வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது. டேராடுனில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி சிறப்பாக விளையாடினாலும், கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. 
Tags:    

மேலும் செய்திகள்