எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் மரணம்.. காரணம் என்ன?

Update: 2024-05-28 02:39 GMT

கடந்த மார்ச் மாதம், தனது 17 வயது மகளை, எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி 53 வயதான பெண் புகாரளித்திருந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மோசடி புகார் குறித்து உதவி கேட்டு போன போது, இச்சம்பவம் நடந்ததாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இவ்விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், இந்த வழக்கு விசாரணை, குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி, மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்ற அப்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலை அவரது மகனும், சகோதரரும் பெற்று சென்ற நிலையில், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்