"என்ன தகுதி இருக்கு..?" - ஈபிஎஸ் தலையில் விழுந்த அடுத்த இடி

Update: 2023-10-14 07:03 GMT

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் என்பவர், தாக்கல் செய்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த, வேட்புமனுவில், சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் எம்.எல்.ஏ.வாக செயல்பட ஈபிஎஸ்-க்கு தடை விதிக்க வேண்டும் எனவும், எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிட வலியுறுத்தியுள்ளார். அத்துடன், அவரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனவும், மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்