"கேப்டன் உருவத்தை பயன்படுத்தாதீங்க".. பிரேமலதா அறிக்கையால் ‘தி கோட்’ படத்துக்கு சிக்கல்?

Update: 2024-07-05 10:57 GMT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருவதாக குறிப்பிட்டுள்ளார். எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிரேமலதா, திரைப்படங்களில் விஜயகாந்தை எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை பயன்படுத்த இதுவரை யாரும் அனுமதி பெறவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை விஜயகாந்த் வருவதாக தகவல் வெளிவந்த நிலையில், தே.மு.தி.க தலைமை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்