தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - விசிக கட்சி வெளியிட்ட அறிவிப்பு

Update: 2024-02-18 14:04 GMT

இந்திய தேர்தல் ஆணையம், நேர்மையான தேர்தலை நடத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தி, வரும் 23-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெற மத்திய பாஜக அரசு சதி செய்வதாக நாட்டு மக்களிடையே ஐயம் எழுந்துள்ளதாகவும், அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணை போகிறதா என்ற சந்தேகமு எழுந்துள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளார். 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க வலியுறுத்தி பிப்ரவரி 23-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்