"சாதிய ரீதியாக செயல்படும் மதுரை ஆட்சியர் - கலவரத்தை ஏற்படுத்தி விடுவார்" - விசிக பிரமுகர் கருத்து

Update: 2024-09-15 02:43 GMT

மதுரையில் காவல்துறையினர் எடுத்துச் சென்ற விசிக கொடிக்கம்பம் மீண்டும் நிர்வாகிகளிடமே ஒப்படைக்கப்பட்டது.

காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்துச் சென்ற கொடி கம்பத்தை விசிக நிர்வாகிகளிடமே ஒப்படைத்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கட்சி கொடி கம்பத்தை காவல்துறையினர் கிரேன் இயந்திரம் மூலம் கொண்டு வந்தனர்... அந்த கொடி கம்பத்தை 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் தோளில் சுமந்தவாறு சென்று ஊன்றுவதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்