விசிக எம்பி மீது திமுகவினர் அதிருப்தி - ஒற்றை வார்த்தையில் ஆஃப் செய்த ஐவர் அணி
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளரை நிறுத்த வேண்டுமென, அக்கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு சில நிர்வாகிகள் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மீது அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தலைமை முடிவு செய்யும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு அறிவுத்தியுள்ளது.