"தம்பி உதயநிதிக்கு.." அன்புமணி வைத்த அன்பு கோரிக்கை | Udhayanidhi Stalin | Anbumani | DMK | PMK

Update: 2024-07-09 16:22 GMT

சென்னை தாம்பரத்தை அடுத்த திருவஞ்சேரியில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி தொடங்கி உள்ளது. இந்தப் போட்டிகளை தமிழக பேட்மிண்டன் கழகத் தலைவரும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பேட்மிண்டன் விளையாட்டிற்கு மாவட்டம் தோறும் உள்விளையாட்டு அரங்குகளை கட்ட வேண்டும் என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை கேட்டுக்கொள்வதாக கூறினார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாங்களும் சிபிஐ விசாரணை கேட்டிருப்பதாக அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்