``உடனே கைவிடுங்கள்..'' ஒரே போடாய் போட்ட TTV | TTV Dhinakaran

Update: 2024-08-26 12:42 GMT

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்