காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் 2 இடங்களில் இருந்தால் வாக்காளருக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கப்படும்... விரும்பும் இடத்தை தவிர்த்து மற்றொரு இடத்தில் பெயர் நீக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தகவல்...
- போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க, அனைத்து கல்லூரிகளிலும் Anti drug club அமைப்பை ஏற்படுத்த வேண்டும்... தலைமை செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தல்...
- பா.ஜ.க. சார்பில், தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி... அமைச்சர்கள் ஜே.பி.நட்டா,அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு...
- தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளதால், புதிய கல்விக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சி... தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் குற்றச்சாட்டு...
- தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கஸ்தூரி ரங்கன் அறிக்கையை புறக்கணிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை... தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா கருத்து...
- தமிழ்நாட்டில் மாறுபட்ட வானிலை காரணமாக சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, உட்பட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு... மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்...
- முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு ஆய்வுக்கு அனுமதி அளித்து, கேரளாவின் கோரிக்கையை ஏற்றது மத்திய நீர் ஆணையம்... 12 மாதங்களுக்குள் ஆய்வை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் பரிந்துரை...
- கன மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா மாநிலம் விஜயவாடா... திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர் நிறைந்து நிற்கும் கழுகுப் பார்வை காட்சி...
- வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் முடியும் வரை, விஜயவாடா மாவட்ட ஆட்சியர் அலுவலம், முதலமைச்சர் அலுவலகமாக செயல்படும்... ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு...
- சென்னையில் கொலை மிரட்டல் காரணமாக காங்கிரஸ் மாநில செயலாளர் ரங்க பாஸ்யம் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு... மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை...
- 100 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 10 நாள் நீதிமன்ற காவல்.... கரூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் உத்தரவு...
- பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை... 2வது முறை தங்கப் பதக்கத்தை வசப்படுத்தி வரலாறு படைத்தார்...
- பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் பிரிவில், வெள்ளி வென்றார் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்... மற்றொரு போட்டியில், வெண்கலம் வென்றார் தமிழக வீராங்கனை மனீஷா ராமதாஸ்...