காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- தூத்துக்குடியில் சிங்கப்பூர் நிறுவனம் சார்பாக, 36 ஆயிரத்து 238 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையில் பசுமை ஹைட்ரஜன் யூனிட் துவக்கம்... முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்...
- டெல்லிக்கு காவடி எடுத்து தப்பி விடலாம் என்று நினைத்தால் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்... திமுக மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு....
- கிணற்றுத் தவளை போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு... அரசியல் நாகரீகம் இல்லாமல் மனதில் அழுக்குடன் இருக்கும் ஈ.பி.எஸ், எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியானவரா எனவும் காட்டம்...
- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்தார், நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்... 'கோட்' படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் தோன்றும் காட்சிகளை காண்பித்ததாக தகவல்...
- மஞ்சள் நிறத்தில், விஜய் ஏற்றி வைத்து ஒத்திகை பார்த்தது, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியா என குழப்பம்... மஞ்சள் வேட்டி, சட்டையில் விரதத்தை துவக்கினார், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்...
- கர்நாடகாவில் நாளை மறுநாள், ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அவசர அழைப்பு... மூடா வழக்கு நெருக்கடியால், முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்யப் போகிறாரா? என சந்தேகம்...
- ரஷ்யாவுடன் போர் தொடரும் நிலையில், வருகிற 23ஆம் தேதியன்று உக்ரைன் செல்கிறார், பிரதமர் மோடி... நாளை முதல் 2 நாட்களுக்கு போலந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்...
- 3 நாள் பயணமாக டெல்லி சென்றார், ஆளுநர் ஆர்.என்.ரவி... பதவி நீட்டிப்பு தொடர்பாக, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்...
- இன்று முதல் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி துவக்கம்... அக்டோபர் 8ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று கள ஆய்வு நடத்தப்படுகிறது...
- மருத்துவமனைகள் பாதுகாப்பு குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை... உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கினார்...
- நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை பொறுத்தே, புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்... தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தப்படும் பணியின் நிலை குறித்து, தமிழக அரசு விளக்கம் அளிக்க முடியுமா எனவும் கேள்வி..
- அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வாட்ஸ்-ஆப் சேனல் மூலம் பிரசாரம்....லத்தின் அமெரிக்க வாக்காளர்கள் அதிகம் வாட்ஸ்-ஆப்பை பயன்படுத்துவதால், தேர்தல் பிரசாரத்தில் புதிய உத்தி...
- ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக, வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்படலாம் என தகவல்... கம்பீர் வகித்த ஆலோசகர் பதவி காலியாக உள்ளதால், அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை...