காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது, அமைச்சரவை... பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்...
- தமிழகத்தில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் விலை அதிரடியாக உயர்வு... 340 ரூபாய் வரை விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவிப்பு...
- உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர வரிசையில், சிறந்த கல்வி நிலையம் மற்றும் சிறந்த கல்லூரி ஆகிய பிரிவுகளில் அண்ணா பல்கலை கழகம் பின்னடைவு... சிறந்த மாநிலப் பல்கலைக்கழகம் என்ற பிரிவில் முதல் இடம் பிடித்தது...
- நாடு முழுவதும் புறநோயாளிகள் பிரிவை இன்று முதல் புறக்கணிப்பதாக மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு... மேற்கு வங்கத்தில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டம்... புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர் சங்கம் உள்ளிட்ட முக்கிய சங்கங்கள் ஆதரவு...
- வரும் 16 ஆம் தேதி, சென்னை கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு...
- நெல்லையில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை சசிகலா சுற்றுப்பயணம்... தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சட்டமன்ற தொகுதி வாரியாக சந்திக்கிறார்...
- மீண்டும் பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்த நிலையில், மதுரை சிறையில் சவுக்கு சங்கரிடம் குற்ற பத்திரிகை நகலை வழங்கிய போலீசார்... புதுப்புது வழக்குகளில் தான் கைது செய்யப்பட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் என சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு...
- ஊடகங்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் மீதான அவதூறு வழக்குகளை பரிசீலிக்கும் போது விசாரணை நீதிமன்றங்கள் கவனமாக இருக்க வேண்டும்... கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பதருதீன் தலைமையிலான தனி பெஞ்ச் அதிரடி உத்தரவு...
- ஷம்பு எல்லையில் விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ள டிராக்டர்களை அப்புறப்படுத்த அறிவுறுத்துமாறு பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு... தேசிய நெடுஞ்சாலைகள் வாகன நிறுத்தும் இடங்கள் கிடையாது என்றும் நீதிபதிகள் கருத்து...
- நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு... ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா ஒருபோதும் தமிழகத்தை எதிரி மனப்பான்மையோடு பார்க்காது... கேரள மாநில அமைச்சர் ரோஷி அகஸ்டின் திட்டவட்டம்...
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்கள் தள்ளுபடி... மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியான கேரள வங்கி நடவடிக்கை...
- வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்... விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்...
- பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்த விவகாரம்... இன்று இரவுக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு...
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்... ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து மூன்றாம் இடத்திலும் இருப்பதாக ஐ.சி.சி. அறிவிப்பு...