தமிழக பட்ஜெட் 2024 -25..! அண்ணாமலை பரபரப்பு ட்வீட் | TN Budget 2024

Update: 2024-02-20 05:20 GMT

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து நிதிநிலை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில், மத்திய அரசின் நலத் திட்டங்களை நீக்கி விட்டால், எஞ்சியிருப்பது, பேருந்து நிலையத்துக்குப் பெயர் வைப்பதும், வெற்று அறிவிப்புகளும், விளம்பரங்களும்தான் என்று கூறியுள்ளார். திமுகவின் 511 தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதிகளை பற்றிய எந்த அறிவிப்புகளும் இல்லாத நிதி நிலை அறிக்கையை, தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வாசிப்பதால் மக்களுக்கு என்ன பயன் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்