``ஆட்சியிலேயே இருக்க கூடாது..'' எரியும் லட்டு... கொதித்தெழுந்த ஹெச்.ராஜா | H Raja

Update: 2024-09-20 16:44 GMT

இந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் ஆட்சி பொறுப்பில் இருக்கக் கூடாது என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் பேசும்போது, திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்து மத நம்பிக்கையற்றவர்கள் கோயில் நிர்வாகம் மற்றும் ஆட்சி பொறுப்பில் இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்