சாலையோர டீ கடையில் இருந்த அமைச்சர்.. உதவி கேட்டு ஒலித்த மாணவியின் குரல்.. அடுத்த நொடியே ரூ.75,000..
அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணி பிச்சை என்பவரது மகள் ஆஷா, நாமக்கல்லில் பி-டெக் படித்து வருகிறார். இந்த சூழலில், அடைக்கலாபுரம் பகுதிக்கு சென்ற மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அங்கு சாலையோர கடையில் தேநீர் அருந்தினார். அப்போது அங்கு சென்ற ஆஷா, அமைச்சரிடம் தனது குடும்பம் ஏழ்மையில் தவிப்பதாகவும், தான் படிப்பதற்கு போதிய வசதி இல்லை எனவும் அமைச்சரிடம் முறையிட்டார். இதனை பொறுமையாக கேட்ட அமைச்சர், யாரும் எதிர்பாராத சமயத்தில் 75,000 ரூபாயை மாணவியிடம் கொடுத்து லேப்டாப் வாங்கிக்கொள்ளுமாறு தெரிவித்தார்.