குழந்தைகளை தொங்கவிட்ட தாய்.. வேலைக்கு சென்று வீடு திரும்பிய கணவனுக்கு அதிர்ச்சி

Update: 2024-07-24 09:09 GMT

மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - கீர்த்திகா, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த நிலையில், கோகுல்நாத், சாய் நந்தினி என இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பினார். அப்போது, தனது மனைவி மற்றும் குழந்தைகள் தூக்கில் சடலமாகக் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் சுமையால் மனவேதனையில் இருந்த கீர்த்திகா, குழந்தைகளுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்துவிட்டு மயக்கமடைந்தபின், இருவரையும் தூக்கில் மாட்டி தானும் தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சோகமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்