பெண்களுக்காக வரவிருக்கும் பிங்க் நிற பேருந்து
தமிழகத்தில் கட்டணப் பேருந்தா இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில்...
தமிழகத்தில் கட்டணப் பேருந்தா இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதற்கட்டமாக 60 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை சனிக்கிழமையன்று சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். படிப்படியாக அனைத்து இலவச பேருந்துகளுக்கும் இந்த நிறம் பூசுவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிங்க் நிறத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமலும், ஆண்கள் வழக்கம் போல கட்டணம் செலுத்தியும் பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.