"மீண்டு வா என் தாயே.." - `சௌம்யா அன்புமணி தோல்வி' - போஸ்டரில் குமுறல்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தர்மபுரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி சௌம்யா அன்புமணி போட்டியிட்டு திமுக வேட்பாளர் மணியிடம் தோல்வியை தழுவினார். இதனால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த பாட்டாளி மக்கள் கட்சியினர், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பல்வேறு இடங்களில் வருத்தம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தோல்வி நிரந்தரம் கிடையாது அதிலிருந்து மீண்டு வா என் தாயே! என குறிப்பிடும் வகையில் அந்த போஸ்டரில் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது. தேர்தல் தோல்விக்கு ஆறுதல் கூறும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது