மேடையில் ராகுல் போட்ட லிஸ்ட் - பகிரங்கமாக வைத்த குற்றச்சாட்டு
மக்களவைத் தேர்தலையொட்டி ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் எதிர்காலத்தைப் பற்றிய தேர்தல் என குறிப்பிட்டார்.
காங்கிரசும், இந்தியா கூட்டணி கட்சிகளும் இந்த தேர்தலில் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்க போராடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.சும், அரசியல் சாசனத்தை அழிக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார்.
அரசியல் சாசனம் அழிக்கப்பட்டுவிட்டால், நாட்டில் உள்ள செல்வங்கள் அனைத்தும் அதானி போன்ற கோடீஸ்வரர்களின் கைகளுக்கே சென்று விடும் என குறிப்பிட்டார். நீர், நிலம், காடுகளை 14-15 தொழிலதிபர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் மோடி நினைப்பதாக, ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.