கார்த்தி சிதம்பரத்தின் `ஓபன் டாக்' - காங்கிரஸ் தலைமை கொடுத்த உடனடி ரியாக்சன்

Update: 2024-07-25 15:33 GMT

அண்மையில் சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம், கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது என பேசி இருந்தார்.

பொது மேடைகளில் காங்கிரஸ் மாநிலத் தலைமை மக்கள் பிரச்சினை குறித்து பேச வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதிகார வர்க்கத்திற்கு தெரிந்தே 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கள்ளச்சாராய விற்பனை நடப்பதாகவும், தமிழகத்தில் கூலிப்படை அதிகரித்துள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணத்தை கொலையா, தற்கொலையா என்று கண்டறியாமல் காவல்துறை உள்ளது என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக, 2026 தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

கார்த்தி சிதம்பரத்தின் பேச்சு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக பொறுப்பாளர் அஜோய் குமாருக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்