தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் வித்தியாசமான தோற்றத்தில் பிரசார வண்டி - காங்.ன் நூதன பிரசாரம்
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில், இம்மாதம் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் சந்திரசேகர ராவை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியினர், அவரை வழியனுப்புவது போல் சித்தரித்து, தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதன்படி, பிரச்சார வாகனத்தில் 'ByeByeKCR' என்ற வாசகத்துடன் காங்கிரஸார் முழக்கங்களை எழுப்பினர்.