மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாற்றுக்கட்சியினர் ஏராளமானோர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் பிரம்மாண்டமாக பேசி மக்களை பிரம்மாண்டமாக ஏமாற்றுவார்கள் என தெரிவித்தார். நமக்கு கிடைக்க வேண்டிய நீரை முதலைமைச்சர் கேட்டு பெறாததால், டெல்டா மாவட்டம் முழுவதும் குருவை பயிர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளை கடந்தும் நீட் தேர்வு தொடர்பாக நடவடிக்கை இல்லை என குறிப்பிட்டார்.