சி.வி சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கில் திடீர் திருப்பம் | ADMK

Update: 2024-11-19 13:55 GMT

தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்து பேசியதாக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஏ. அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், சிவி சண்முகம் சார்பில் இடைக்கால தடையை நீட்டிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம், சி.வி சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்குகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து, விசாரணையை தள்ளி வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்