ரூ. 4 கோடி விவகாரத்தில் திடீர் திருப்பம் பின்னணியில் பிரபல நகைக்கடை உரிமையாளர் வெளியான பரபரப்பு தகவல்
தாம்பரம் ரயில் நிலையத்தில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரபல நகைக்கடை உரிமையாளரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் கைதான நால்வர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி எஸ்.ஆர் சேகர், நீல முரளி யாதவ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலம் நான்கு கோடி ரூபாய் கைமாற்றப்பட்டது தெரியவந்திருக்கிறது. தனது உதவியாளர் மூலம் பணத்தை நகைக் கடை உரிமையாளர் கொடுத்தாக கூறப்படும் நிலையில், நகைக்கடை உரிமையாளரிடம் போலீசார் முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி இருக்கின்றனர்.