இலங்கை அதிபர் தேர்தல் - களத்தில் குதித்த தமிழர்..."எங்கள் ஒற்றுமையை காட்டும் நேரம் இது"
இலங்கையில், தமிழ் தேசியத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு அடையாளமாக இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். தமிழ் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாக்கியசெல்வம் அரியநேத்திரன் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தினார். தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்த் தேசியத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு அடையாளமாக பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.